வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஈசியா பணம் அனுப்பலாம் புதிய அப்டேட் முழு விவரம்




வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் வாட்ஸ்அப், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்ப்படும் யுபிஐ (UPI) முறையில் இந்திய பயனர்கள் சர்வதேச பேமெண்ட்களை தடையின்றி மேற்கொள்ள உதவும் புதிய அம்சம் தொடர்பாக வாட்ஸ்அப் முயற்சி எடுத்து வருகிறது எனக் கூறப்படுகிறது.

இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

சர்வதேச பெமெண்ட் அம்சம் தற்போது சோதனை நிலையில் உள்ளது. பொது பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இது எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments