மண்டபம் அருகே அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை




ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ஒரு அரசு பஸ்சை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர். அந்த பஸ்சில் அந்தமானில் இருந்து வந்திருந்த சக்திவேல் என்பவர் பயணம் செய்து வந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என தெரியவந்ததும் பஸ்சில் இருந்து அவரை கீேழ இறக்கினர். தீவிர விசாரணையில், அந்தமானில் இருந்தபோது ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை பகுதியை சேர்ந்த ஒருவருடன் தனக்கு பணபரிவர்த்தனை இருந்ததாகவும், தற்போது மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் ஆற்றாங்கரையை சேர்ந்த அந்த நபரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு செல்வதாகவும் கூறி இருக்கிறார். 

ஆனால், ஆவணங்கள் இல்லாததால் ரூ.10 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ராமநாதபுரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments