கொத்தமங்கலத்தில் மழைநீரை வீணாக்காமல் குழாய் மூலம் தொட்டியில் சேமிப்பு




புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒவ்வொரு நீர்நிலைக்கும் தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் மராமத்து இல்லாமலும் ஆக்கிரமிப்புகளாலும் காணாமல் போய்விட்டது. கிராமங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு மழைத் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தூர்வாரும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் தான் கடந்த பல மாதங்களுக்கு பிறகு கீரமங்கலம் பகுதியில் மழை பெய்தது. இந்த மிதமான மழைத் தண்ணீரையும் வீணாக்காமல் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வீரமணி என்ற இளைஞர், தன் வீட்டு கூரையில் விழும் மழை தண்ணீரை தூசிகள் வராமல் பல இடங்களில் சல்லடை வைத்து வடிகட்டி பிளாஸ்டிக் குழாய் மூலம் பழைய கிணற்றை தண்ணீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி சேமித்து குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகிறார். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் புதிய வீடுகள் கட்டும் போது செப்டிக் டேங்க் கட்டுவது போல மழைநீர் சேமிப்பு தொட்டிகளும் கட்டிக் கொண்டால் நம் வீட்டிற்குத் தேவையான தண்ணீரை நாமே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

மேலும் எஞ்சிய தண்ணீரை அருகில் உள்ள பழைய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சேமித்து மழைத் தண்ணீர் வீணாகாமலும் நிலத்தடி நீரை உயர்த்தலாம் என்றும் இளைஞர்கள் கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments