ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் வந்த 2,600 டன் அரிசி மூட்டைகள் வளாகத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைப்பு




ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் வந்த 2,600 டன் அரிசி மூட்டைகள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலையத்தின் வளாகத்தில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

பச்சரிசி மூட்டைகள்

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் மூட்டைகளை உடனடியாக சரக்கு ரெயிலில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கி லாரிகளில் ஏற்றப்படும். லாரிகள் மூலம் அந்த மூட்டைகள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுவது நடைமுறை.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2,600 டன் பச்சரிசி மூட்டைகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தது. இதனை இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அரிசி மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும் ஒப்பந்த பணியில் லாரிகள் வருவதில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லாரிகள் வராததால் வேகன்களில் பச்சரிசி மூட்டைகள் அப்படியே இருந்தன.

திறந்த வெளியில் அடுக்கி வைப்பு

இந்த நிலையில் சரக்கு ரெயில் நிற்கும் நேரம் அதிகமானதால் வாடகை கூடுதலாக கணக்கிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரக்கு ரெயில் வேறொரு இடத்திற்கு தேவைப்பட்டதால் வேகன்களில் இருந்த பச்சரிசி மூட்டைகளை இறக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பச்சரிசி மூட்டைகள் வேகன்களில் இருந்து இறக்கப்பட்டு அதே இடத்தில் வளாகத்தில் வெளிப்பகுதியில் நேற்று அடுக்கி வைக்கப்பட்டன. அதன்பின் லாரிகள் வர ரெயில் நிலையத்தில் இருந்து பச்சரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இருப்பினும் ஏராளமான அரிசி மூட்டைகள் வெட்ட வெளியில் திறந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

© 202
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments