2024 மக்களவை தேர்தல்: கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை வெளியூர் வாக்குசாவடிக்கு மாற்றி குளறுபடி! வாக்களிக்காமல் திரும்பிய மக்கள்!!




2024 மக்களவை தேர்தலில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை வெளியூர் வாக்குசாவடிக்கு மாற்றி குளறுபடி நடைபெற்று உள்ளதால் வாக்களிக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19/04/2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 6.00 மணி வரை அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோபாலப்பட்டிணத்தில் காலை 7 மணி முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் காலை முதலே வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வமுடன் வாக்கு சாவடியை நோக்கி படையெடுத்தனர். 

இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இதையடுத்து வாக்குச்சாவடிக்கு வெளியே சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சினர் பூத் சிலிப் இல்லாதவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறதா என கண்டறிந்து பூத் நம்பர் மற்றும் பார்ட் நம்பர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேடிய நிலையில் வாக்காளர் பெயர்கள் கோபாலப்பட்டிணம் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து வோட்டர் ஹெல்ப் அப்ப்ளிகேஷன் மற்றும் இணையதளத்தில் தேடி பார்த்ததில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கோபாலப்பட்டிணம் வாக்குசாவடி இல்லாமல் மீமிசல், முத்துக்குடா, நாட்டாணி மற்றும் அறந்தாங்கி போன்ற பல கிலோ மீட்டர்ட்கள் உள்ள ஊர்களில் வாக்குச்சாவடி உள்ளதாக காட்டியது. இதில் அதிகமானோர் பெண்களாவே இருந்தனர். இதையடுத்து அவர்கள் கூறுகையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்ட மன்ற தேர்தலில் இங்கு தான் வாக்களித்தோம் என்று கூறியதோடு வெளியூர் சென்று வாக்களிக்க முடியாது என்று புலம்பியதோடு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

கடந்த இரண்டு தேர்தல்களில் வாக்களித்த நிலையில் கோபாலப்பட்டிணம் வாக்காளர்களின் பெயர்கள் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றி இருப்பது திட்டமிட்டே மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments