ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தொகுதியில் 68.63 சதவீத வாக்குகள் பதிவு மதுரை-61.95, விருதுநகர்-70.32




ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 125 வாக்காளர்கள் உள்ளனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு நேற்று காலையில் விறுவிறுப்பான தொடங்கிய நிலையில் நேரம் செல்ல, செல்ல விறுவிறுப்பின்றி மந்தமாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதிய நேரத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ராமநாதபுரம் தொகுதியில் நேற்று மாலை 6 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு:-

அறந்தாங்கி- 68.78, பரமக்குடி (தனி) -67.81, திருவாடானை-66.14, ராமநாதபுரம்-66.89, முதுகுளத்தூர்-65.49, திருச்சுழி-76.69.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 68.63 சதவீத வாக்குகள் பதிவாகின.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments