கட்டுமாவடி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழப்புகட்டுமாவடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

அறந்தாங்கி அருகே ஆயங்குடி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 21). ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் முரளி (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் எஸ்.பி. பட்டினத்தில் இருந்து கட்டுமாவடி சாலை வழியாக அறந்தாங்கி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை முரளி ஓட்டிச்சென்றார். புறங்காடு என்ற இடத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைத்தடுமாறிய அவர்கள் 2 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதையடுத்து படுகாயம் அடைந்த சங்கரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். 

இந்த விபத்து குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments