கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் வெறிச்சோடிய மீன்பிடி தளம் படகுகள் வரிசையாக நிறுத்தி வைப்பு




கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் மீன்பிடி தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த வருடமும் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்த தடைக்காலம் சுமார் 61 நாட்கள் நீடிக்கும். அதுவரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள்.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விசைப்படகுகள் வரிசையாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சொந்த ஊருக்கு பயணம்

இந்த பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் பெரும்பாலும் நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்துடன் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்பொழுது மீன்பிடி தடைக்காலமும், கோடை விடுமுறையும் ஒன்றாக வந்ததன் அடிப்படையில் மீனவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

வியாபாரம் பாதிப்பு

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் மீன்பிடி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. தற்பொழுது மீன்பிடி தடைக்காலம் என்பதால் அந்த தொழில்கள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக ஐஸ் பிளான்ட், ஓட்டல்கள், மளிகை கடை போன்றவை பாதிப்படைந்துள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments