எஸ்.பி.பட்டினத்தில் மாநில கைப்பந்து போட்டி
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் நண்பர்கள் நற்பணி சங்கம் சார்பில் 46-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை எஸ்.பி.பட்டினம் ஜமாத் தலைவர் ஹசன் அலி, திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

இதில் சென்னை, புதுச்சேரி, கீழக்கரை, ராமநாதபுரம், தொண்டி உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.இதில் முதல் பரிசை எஸ்.பி.பட்டினம், எஸ்.ஆர்.அண்ட் கோ அணியும், 2-வது பரிசை சன் ஸ்டார் அணியும், 3-வது பரிசை டி.கே.எஸ். அணியும், 4-வது பரிசை கே.எம்.ஆர்.குரூப் அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், நண்பர்கள் நற்பணி சங்கத் தலைவர் அப்துல் அஜீஸ், விளையாட்டு குழு தலைவர் கலந்தர் அலி, செயலாளர் செய்யது ரபீக், பொருளாளர் ஹாரூன் ரஷீத் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments