கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!



கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது கொலை செய்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் வரை உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் சின்னப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசலில் ஜூஸ் கடையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரம்ஜானியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு கோபாலப்பட்டிணம் அருகே தலையில் காயம் ஏற்பட்டு  நைனா முகமது இறந்து கிடந்தார். மேலும், நைனா முகமதுவை மர்ம ஆசாமிகள் அடித்துக்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நைனா முகமது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் நைனா முகமதுவை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை அவரது உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினர். 

இதனால் நைனா முகமது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments