மீமிசல் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.84 ஆயிரம் பறிமுதல்



ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் அருகே அரசங்கரை சோதனை சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் ஓட்டி வந்த காரை மறித்து சோதனை செய்தனர். 

அப்போது காரில் ரூ.84 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. 

இதையடுத்து அவரிடமிருந்து ரூ.84 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி கோட்டாட்சியருமான சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments