கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு குளர்வித்த கோடை மழை





கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஏப். 12) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 12.04.2024 வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து  மழை நீண்ட நாட்களுக்கு பிறகு  பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது.

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது 

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments