கோபாலப்பட்டிணத்தில் பழைய சாலையை தோண்டாமல் புதிய சாலை அமைக்க ஒப்பந்ததாரர் முயற்சி! இளைஞர்கள் ஒன்று திரண்டதால் தோண்டப்பட்ட பழைய சாலை!



கோபாலப்பட்டிணத்தில் பழைய சாலையை தோண்டாமல் புதிய சாலை அமைக்க ஒப்பந்ததாரர் முயற்சித்ததால் இளைஞர்கள் ஒன்று திரண்டதால் பழைய சாலை தோண்டப்பட்டது.

கோபாலப்பட்டிணம்-மீமிசல் இணைக்கும் காவல் நிலைய காட்டுக்குளம் சாலை பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மீமிசல்-கோபாலப்பட்டிணத்தை இணைக்கும் முக்கிய சாலையாக காட்டுக்குளம்-காவல் நிலைய செல்லும் சாலை மற்றும் ஸ்டேட் பேங்க் சாலை இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்து வந்த நிலையில் கடந்த 06.07.2023 அன்று முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்ச மதிப்பீட்டில் இரண்டு சாலைகளும் புதிதாக தார் சாலை அமைப்பதற்காக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு சுமார் பல மாதங்கள் எந்த வேலைகளும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று 28.04.2024 காலை கோபாலப்பட்டிணம்-மீமிசல் இணைக்கும் காவல் நிலையம்-காட்டுக்குளம் புதிய சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. பழைய சாலையை தோண்டி எடுக்காமல் பழைய சாலையின் மேல் புதிய சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டார். இதனையடுத்து இதுகுறித்து அறிந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று உடனடியாக பணியை நிறுத்தினர். மேலும் ஒப்பந்ததாரரிடம் பழைய சாலையை அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் பழைய சாலையை தோண்டும் பணியை மேற்கொண்டு புதிய தார்ச்சாலை அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் கூறியதாவது சாலை தரமானதாக போடப்படப்படுகிறதா என்று இளைஞர்கள் கண்கானிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பித்தக்கது.

பழைய சாலையை சுரண்டாமல் சாலை அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.01.2022 எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் கடந்த 15.01.2022 வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments