கோபாலப்பட்டிணத்தை உலுக்கிய படுகொலை சம்பவம்: நைனா முகமது கொலை வழக்கில் கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர் ASM.செய்யது முகமது கைது!



மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த நைனா முகமது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் நைனா முகமது(45) இவர் மீமிசல் கடைவீதியில் கூல்டிரிங்ஸ் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம்போல நைனா முகமது கடையை பூட்டி விட்டு இரவு கோபாலப்பட்டிணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பைக்கில் சென்ற போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சாலே ஓரத்தில் கிடந்தார். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதணை செய்த மருத்துவர்கள் நைனா முகமது ஏற்கனவே இறந்து விட்டார் என கூறி உள்ளனர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மீமிசல் வர்த்தக சங்கத்தினர் மீமிசல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்கவேண்டும் என கோரி கிழக்கு கடல்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கௌதம் பஸ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார். இந்த கொலை அரசியல் காரணமா?அல்லது முன்விரோதம் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவை வைத்து நேற்று முன் தினம் கோபாலப்பட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது உசேன்(29) முஸ்தமின்(21), சல்மான் கான்(20), ஹசன்(29) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கார் 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரையும் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

இந்த கொலை வழக்கு தொடர்பான முக்கிய குற்றவாளியை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கௌதம் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவரும், தொழிலதிபருமான செய்யது முகமது(55) என்பரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Source: தினகரன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments