கோபாலப்பட்டிணத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய TNTJ மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்!






கோபாலப்பட்டிணத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமது அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து TNTJ மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோ.நெய்னா முகமது அவர்கள் கடந்த 22.04.2024 திங்கள் இரவு பின்னேரம் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. 
இது சம்பந்தமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சகோ.முஜிபுர் ரஹ்மான் இன்று  27.04.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியலவில் கொலை செய்யப்பட்ட சகோ.நெய்னா முகமது அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
மேலும் மீமிசல் காவல் நிலையத்திற்கு சென்று, இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்திட வேண்டும் எனவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்கள்.




பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,

சகோ.நெய்னா முகமது அவர்களை படுகொலை செய்த குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்துள்ளது. மேலும் காவல்துறையின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது எனவும், கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில், இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து கஞ்சா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதையும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சகோ.முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
இந்த சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது மீரா, மாவட்டத் துணைச் செயலாளர் குலாம் முஹம்மது பாட்ஷா மற்றும் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இப்படிக்கு,
பி.முஹம்மது மீரான்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562683, 8110987802

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments