கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் பெய்த தொடர் கோடை மழை காரணமாக காட்டுக்குளம் நிரம்பியது!



கோபாலப்பட்டிணத்தில் கடந்த 2023 ஆண்டு மே மாதத்தில் இதே நாளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக காட்டுக்குளம் நிரம்பியது மக்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம், நெடுங்குளம் ஆகிய இரண்டு குளங்களை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் கொட்டி தீர்த்த கனமழையால் காட்டுகுளம் நிரம்பியது. ஆனால் இந்த வருடம் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டதால் மண்டைய பிளக்கும் அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல மழை பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதுடன் மக்களுக்கும் தேவை பூர்த்தியானது.

பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம். 

போதிய பருவ மழை இல்லாமல் குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது. 03-05-2023 இரவு பெய்த கண மழையால் குளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பியது தற்போது வரை மக்கள் குளித்து வருகிறார்கள்.
 
வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு தொடர் மழையால் குளங்கள் நிரம்பி இருப்பது கோபாலப்பட்டிணம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் மாக்களை வாட்டி வருவதால் இந்த ஆண்டு கோடை மழை பெய்து இரு குளங்கள் நிரம்ப வேண்டும் மக்களின் கனவாக உள்ளது.

காட்டுக்குளம் நெடுங்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றி சுத்தம் செய்யப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் குளத்தில் நிரம்பி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments