புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 3,226 மாணவ-மாணவிகள் எழுதினர். 114 பேர் தேர்வு எழுத வரவில்லை.
‘நீட்’ தேர்வு
மருத்துவப்படிப்புக்குரிய நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி, எம்.ஆர்.எம். சர்வதேச பள்ளி, மாத்தூர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி, சுதர்சன் பொறியியல் கல்லூரி, அறந்தாங்கியில் சாய் லாரல் சி.பி.எஸ்.இ. பள்ளி, லாரல் மெட்ரிக் பள்ளி, டாக்டர்ஸ் பப்ளிக் பள்ளி, சேக் பாத்திமா மெட்ரிக் பள்ளி ஆகிய 8 மையங்களில் நடைபெற்றது.
மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை எழுத மொத்தம் 3,340 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து ஏற்கனவே நுழைவுச்சீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் போதுமான விழிப்புணர்வுடன் அதனை கடைப்பிடித்து தேர்வு மையங்களுக்கு நேற்று வந்திருந்தனர்.
பலத்த சோதனை
தேர்வு மையத்திற்குள் தலையில் மாட்டும் கிளிப், ரப்பர் பேண்ட், முழுக்கை சட்டை, ஷால், தோடு, செயின் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், இவற்றை அணிந்து வந்த மாணவ-மாணவிகள் அதனை கழற்றி தங்கள் பெற்றோரிடம் கொடுத்து சென்றனர். மேலும் பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை அருகே சிவபுரம் எம்.ஆர்.எம். சர்வதேச பள்ளி மையத்தில் ‘நீட்’ தேர்வை எழுத மாணவ-மாணவிகள் நேற்று காலையிலேயே வரத்தொடங்கினர். தேர்வு மையத்திற்குள் காலை 11.30 மணிக்கு மேல் மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
3,226 பேர் தேர்வு எழுதினர்
தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் வாழ்த்தி வழியனுப்பினர். தேர்வு மையத்திற்குள் கடைசியாக மதியம் 1.30 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்கு கடைசியாக வந்தவர்கள் வேகமாக ஓடிச்சென்று தேர்வு மையத்திற்குள் சென்றனர். இதேபோல் தேர்வு எழுதுபவர்கள் 2 புகைப்படம் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒருசிலர் புகைப்படம் கொண்டு வரவில்லை. இதனால் அவர்களுக்காக அங்கேயே புகைப்படம் எடுத்து உடனடியாக வினியோகிக்கும் வசதி முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.
8 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 3,226 மாணவ- மாணவிகள் எழுதினர்.
114 பேர் தேர்வு எழுத வரவில்லை. ‘நீட்’ தேர்வு நடைபெற்ற மையங்கள் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். தேர்வு நடைபெற்றதை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் தரையில் அமர்ந்தும், சிலர் மரத்தின் கீழும் ஓய்வெடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.