தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்-2 முடிவுகள்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள்.
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு திட்டமிட்டப்படி வெளியாகிறது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, கால்நடை மருத்துவப்படிப்பு, சித்த மருத்துவ படிப்பு என பல்வேறு உயர்கல்விகளை தேர்வு செய்வர்.
அரசு கல்லூரியில் சேர...
உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
இதற்கான 2024-25ம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவு தொடக்கம்
இதுதொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ.48-ம், பதிவு கட்டணமாக ரூ.2-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது. பதிவு கட்டணம் ரூ.2 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்களில், ‘The Director, Directorate Of Collegiate Education, Chennai-15' என்ற பெயரில் மே 6-ந்தேதி (இன்று) அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்ட மற்றும் கால அட்டணையை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24343106, 044-24342911 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்று தொடங்கும் நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை இடங்கள்:
தமிழகத்தை பொறுத்தவரை கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சத்து 7395 இடங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்திருந்தனர். அனைத்து இடங்களும் கடந்தாண்டு நிரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சலுகைகள்:
அரசு கல்லூரியில் சேரும்போது மிகக் குறைந்த கட்டணம் தரமான ஆசிரியர்கள் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் பாடத்திட்டம் என பல்வேறு வகையில் சிறப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இலவச பேருந்து பயணம் மாணவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்டவையும் அரசால் வழங்கப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.