புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை தற்காப்பு வழிமுறைகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியீடு




புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை தற்காப்பு வழிமுறைகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியீடு

 புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை தற்காப்பு வழிமுறைகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ளார் 

* காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

* தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் பருகுதல் வேண்டும்.

* வெளிபுறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உள்ளே குழந்தைகளை தனியே விட்டுவிட்டு செல்லாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

* வெளிப்புறங்களில் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேலை செய்வதை தவிர்த்திடல் வேண்டும்.

* விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுக்கான பணிகளை செய்தல் வேண்டும்.

* 'கோடை காலம் முழுவதும் துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

* வெளியே செல்லும் போது கருப்பு கண்ணாடி அணிந்து மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தி செல்லலாம்.

* இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்திடல் வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments