அறந்தாங்கியில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 50 கிலோ பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை!




அறந்தாங்கியில் உள்ள பழக்கடையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 50 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலைய பகுதியில் உள்ள பழக்கடையில் ரசாயன கல் மூலமாக பழங்களை பழுக்க வைத்து அந்த பழங்களை பழக்கடை, கூல்டிரிங்க்ஸ் கடைகளில் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் ேபரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜேம்ஸ் தலைமையில், அறந்தாங்கி நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தரராஜ், பிரபாகரன் ஆகியோர் அறந்தாங்கி பகுதியில் உள்ள கடைகளில் தீவிர ேசாதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அறந்தாங்கியில் உள்ள ஒரு பழக்கடையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்து வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி உள்ளிட்ட 50 கிலோ பழங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 50 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழங்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் ரசாயன கல் மூலமாக பழுக்க வைத்த பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments