மே மாதமும் கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களின் வரலாறும்





கோபலப்பட்டிணத்தின் பள்ளிவாசல் வரலாறு பற்றி இன்றைய இளைய தலைமுறைக்கு GPM மீடியா நினைவுப்படுத்துகிறது.

கோபாலப்பட்டிணத்தில் மே மாதத்தில் அதிமாக பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள எழில் மிகு அழகு கொண்ட கடற்கரை கிராமம் தான் கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டிணத்தில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 3500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 5 வார்டுகள் உள்ளன.

பள்ளிவாசல்கள்:

ஒரு ஜும்மா பள்ளிவாசலும், 3 வக்து பள்ளிவாசலும் உள்ளது. ஒரு தவ்ஹீத்  பள்ளிவாசலும் உள்ளது.

மதரஸா:

ஜும்மா பள்ளி, காட்டுக்குளம் பள்ளி, அவுலியா நகர் பள்ளி, கடற்கரை பள்ளி மற்றும் ரஹ்மனியா பெண்கள் மதாரஸா (பெண் பிள்ளைகள் மட்டும்) ஆகிய இடங்களில் மதரஸாக்கள் நடைபெறுகின்றன. இங்கு பல ஆலிம் பெருமக்களையும், ஆலிமாக்களையும் உருவாக்கிய ஊரில் தற்போது பெண்கள் மட்டும் ரஹ்மனியா பெண்கள் மதரஸாவில் ஆலிமா பயின்று பட்டங்கள் பெறுகின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகள் குர்ஆன் ஓதுதல் மற்றும் மார்க்க கல்வி கற்றும் வருகின்றனர்.

கோபாலப்பட்டிணம்  பெரிய பள்ளிவாசல் (மூகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல்) 




கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் மக்கா தெரு பகுதியில் அமைந்துள்ளது.  பழைய மற்றும் நெடுங்குளம் இதன் அருகில் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகை நடைபெற்று வருகிறது.‌ இந்த பள்ளிவாசல் புதுப்பொலிவுடன் கடந்த 18-05-2007 வெள்ளிக்கிழமை (1 ரபீவுல் ஆகிர் ஹிஜிரி 1428) ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

கோபாலப்பட்டிணம்  காட்டுக்குளம் பள்ளிவாசல் (மஸ்ஜிதுல் ஹசன்)




கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசல் மதினா தெரு பகுதியில் அமைந்துள்ளது.  காட்டுக்குளம் இதன் அருகில் உள்ளது.  இந்த பள்ளிவாசல் புதுப்பொலிவுடன் கடந்த 13-05-2018 வியாழக்கிழமை (27 ஷாபான் ஹிஜிரி 1439) ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

கோபாலப்பட்டிணம்  கடற்கரை பள்ளிவாசல்‌ (மஸ்ஜித் தக்வா)






கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் மக்கா தெரு 3-ஆம் வீதியில்  (ஆலமரத்தில்) அமைந்துள்ளது.  ஈத்கா மைதானம் மற்றும் ஆலமரம் இதன் அருகில் உள்ளது. இந்த பள்ளிவாசல் புதுப்பொலிவுடன் கடந்த 18-05-2017 (21 ஷாபான்-னில் 1438) ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

கோபாலப்பட்டிணம்  அவுலியா நகர் பள்ளிவாசல்




கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசல் அவுலியா நகர் பகுதியில் அமைந்துள்ளது.  அவுலியா நகர் கடற்கரை செல்லும் வழியில், அவுலியா நகர் ஆலமரம் , ஊராட்சி மன்ற அலுவலகம் இதன் அருகில் உள்ளது. 

இந்த பள்ளிவாசல் 1993 காலகட்டத்தில் திறக்கப்பட்டது. ஆனால் அதன் சரியான தேதி தெரியவில்லை மற்றும் பள்ளிவாசல் பெயர் என்னவென்று ஊர் மக்களிடம் விசாரித்தோம் ஆனால் யாருக்கும் தெரியவில்லை. எனவே இந்த செய்தியை பார்க்கும் நபர்கள் உங்களுக்கு அவுலியா நகர் பள்ளிவாசல் திறந்த தேதி பள்ளிவாசல் பெயர் அதிகாரப்பூர்வமாக தெரிந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். அதை நாங்கள் பதிவு செய்கின்றோம். 

கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா (நூருல் ஐயின் கட்டிட வளாகம்)

கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐன் புதிய கட்டிடம் கடந்த 12.05.2022 வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதுவும் புதியதாக கட்டி மே மாதமே திறக்கப்பட்டுள்ளது.

மே மாதம் கோபாலப்பட்டிணத்தின் மறக்க முடியாத வரலாறாக அமைகிறது.

தொகுப்பு: GPM மீடியா

இந்த பதிவில் தவறுகள் எதுவும் இருப்பின் எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் அதை திருத்தி கொள்கின்றோம். மேலும் எதுவும் விடுபட்டு இருந்தால் அதை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள் சேர்த்து பதிவு செய்கின்றோம்.


இந்த பதிவை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்வதில் GPM மீடியா மகிழ்ச்சி அடைகிறது.

இது போன்று நமது ஊரின் முக்கிய வரலாற்று பதிவுகள் இருந்தால் அதைப்பற்றி தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments