காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்.




மே19 அன்று கீழ்கண்ட மாற்றங்கள் இருப்பதால் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.

1. வண்டி எண் 20895 ராமேஸ்வரம் புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை செல்லாது. மானாமதுரையில் இருந்து மதுரை, திண்டுக்கல் வழியாக திருச்சி செல்லும்.

2. வண்டி எண் 06197 திருவாரூர் - காரைக்குடி பாசஞ்சர் பெரியகோட்டை வரை மட்டுமே செல்லும், கண்டனூர் புதுவயல், காரைக்குடி போகாது.

3. வண்டி எண் 06829 திருச்சி - காரைக்குடி பாசஞ்சர் செட்டிநாடு வரை மட்டுமே செல்லும். கோட்டையூர், காரைக்குடி போகாது. அதே போல மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06126 காரைக்குடி - திருச்சி பாசஞ்சர் செட்டிநாடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

4. 06830 காரைக்குடி - திருச்சி பாசஞ்சர் மற்றும் 06125 திருச்சி - காரைக்குடி பாசஞ்சர் ரயில்கள் முழுவதும் ரத்து.

5. 16849 திருச்சி - ராமநாதபுரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மற்றும் 16850 ராமநாதபுரம் - திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுவதும் ரத்து.

6. 06198 காரைக்குடி - திருவாரூர் பாசஞ்சர் மாலை 6 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 7 மணிக்கு புறப்படும்.

7. 06887 திருச்சி - காரைக்குடி பாசஞ்சர் 20 நிமிடம் தாமதமாக காரைக்குடி வந்து சேரும், வழியில் எங்காவது 20 நிமிடம் நிறுத்தப்படலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments