நடுவானில் பறந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டதால், திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதனால் 137 பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
தரையிறக்கப்பட்ட விமானம்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் தினமும் காலை 8.40 மணிக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட வேண்டிய அந்த விமானம், தாமதமாக மதியம் 12.50 மணிக்கு, 137 பயணிகளுடன் புறப்பட்டது.
சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்தபோது திடீரென அந்த விமானத்தின் கேபின் உள்பகுதியில் அழுத்தம் குறைந்தது போன்று விமானிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் முன்னெச்சரிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் உடனடியாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதில் மதியம் 1.40 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கியது.
பயணிகள் தவிப்பு
இதையடுத்து அந்த விமானத்தில் சோதனை செய்தபோது அந்த விமானத்தின் உள்பகுதியில் அழுத்தம் குறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் அதனை உடனடியாக சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். மேலும் துபாயில் இருந்து திருச்சி வந்து சார்ஜா புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, மாற்று விமானமாக திருச்சியில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் செய்தனர்.
மாற்று விமானத்தில்...
அதன்படி அந்த மாற்றுவிமானத்தின் மூலம் பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு மாலை 5.50 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த விமானம் பெங்களூருவில் இருந்து திருச்சி வந்த பிறகு, இங்கிருந்து அந்த விமானம் சார்ஜா நோக்கி சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.