அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி வரை பதிவுக்கட்டண செலுத்த விலக்கு அளிக்கப்படுவதாக அயலக தமிழர் நலத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.
உறுப்பினர்
அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க முதல்-அமைச்சரின் ஆணை ‘அயலக தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட்டுள்ளது.18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள், அயலக தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி அயலக தமிழர் (வெளிநாடு) மற்றும் அயலக தமிழர் (வெளிமாநிலம்) பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையை பெறலாம்.
கட்டண விலக்கு
உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக 15.5.2024 முதல் 15.8.2024 வரையிலான 3 மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர்களுக்கு விபத்து காப்பீடு, தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு, கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆதல் மற்றும் மேற்காணும் திட்டங்கள் குறித்த கூடுதல் விளக்கங்களை 18003093793 (இந்தியாவிற்குள்), 8069009901 (வெளிநாடுகளில் இருந்து தொடர்புக்கு), 8069009900 (மிஸ்டு கால்) என்ற கட்டணமில்லா உதவி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
பயண புத்தாக்க பயிற்சி
மேலும், வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்க பயிற்சியானது தஞ்சாவூர், ராமநாதபுரம், பெரம்பலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அளிக்கப்படுகிறது. இதில், தஞ்சாவூர், ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சந்தானம் (86104 64077, 97915 25231) என்பவரையும், கன்னியாகுமரி, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வளர்மதி (99401 97583, 82200 24967) என்பவரையும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தெய்வானை (96885 20300) என்பவரையும் தொடர்பு கொள்ளலாம்.
இது தவிர, வெளிநாடு தமிழர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் முறை மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு அயலக தமிழர் நலத்துறை ஆணையரக வலைதளத்தினை (https://nrtamils.tn.gov.in) பார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.