புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து அறந்தாங்கி அம்மா உணவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கர்ணா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் தூய்மை பணியில் சுமார் 150 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளம் முறையாக 5-ந்தேதிக்குள் வழங்குவது இல்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் கடந்த 23-3-2024 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்ற வில்லை. அதனால் தொழிலாளிகள் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒப்பந்த ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப். தொகையை 12 சதவீதம் மற்றும் நிர்வாக பங்கு தொகை 12 சதவீதம் 8 மாத காலம் கட்டாமல் கையாடல் செய்து பணத்தை உரிய நிறுவனத்தில் செலுத்திய ரசீது வழங்குதல் இல்லை. அம்மா உணவக ஊழியர்களுக்கு அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் பி.எப். தொகை உரிய நிறுவனத்தில் முறையாக செலுத்த வேண்டும். மாதம் மாதம் சம்பள பட்டியல் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.