தனியார் கல்லூரிகள் உள்பட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. அதன்பிறகு, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அனைத்து வகை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தங்கள் கல்லூரி கட்டணத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி கட்டணம்
இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024-25-ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை மாணவர்கள் சேர்க்கை இணையதளத்தின் மூலம் நடத்தப்பட வேண்டும். தனியார் கல்லூரிகள் உள்பட அனைத்து வகை கல்லூரிகளும் தங்களின் கல்லூரி கட்டணத்தை, மாணவர் சேர்க்கையின் விளக்க குறிப்பேட்டில் இடம் பெற செய்யவேண்டும். மேலும், www.tngasa.in. என்ற இணையதளத்திலும் கல்வி கட்டணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கேன மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கையின்போது, இடஒதுக்கீடு முறைகள் 100 சதவீதம் பின்பற்றப்பட வேண்டும். தனியார் கல்லூரிகள், சுயநிதி சேர்க்கைக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு முன்பாக, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
தரவரிசை பட்டியல்
மாணவர் சேர்க்கையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், கல்லூரி முதல்வர்களும், மாணவர் சேர்க்கை குழுவும் அதற்கு முழு பொறுப்பு. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 400 மதிப்பெண்களுக்கு தயார் செய்யவேண்டும். தரவரிசை பட்டியல் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தரவரிசை பட்டியல் விவரங்களை, மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாகவும், இ-மெயில் முகவரி மூலமும் கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். மேலும், கல்லூரி கல்வி இயக்ககத்தின் www.tngasa.in என்ற இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.