அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே இடையாத்தூர் கிராமத்தில் நாகம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 22-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 31 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 5 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசை தினையாக்குடி ஆர்.கே.வக்கீல் சிவா, 2-ம் பரிசை செந்தூரன் பிரதர்ஸ் வாத்தலக்காடு நெப்போலியன், 3-ம் பரிசை மணலூர் வெண்மேக சசி பிரதர்ஸ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

நடுமாடு பிரிவு

தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கு பந்தய தூரம் போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை காட்டுக்குடி ஏ.கே.எம்.சிவாயா, 2-ம் பரிசை அன்னவாசல் பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன், யோகேஸ்வரன், பீர்க்கலைக்காடு எஸ்.பி.ஆர்.பெரியசாமி, 3-ம் பரிசை கொடிவயல் கிராமத்தை சேர்ந்த தமிழ்வாணன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

கரிச்சான் மாடு பிரிவு

இதையடுத்து கரிச்சான் மாடு பிரிவில் 18 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதன் பந்தயத் தொலைவு போய் வர 4 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை சிங்கவனம் ஜமீன் ராஜாசிதம்பரசன், 2-ம் பரிசை சந்தமனை கிராமத்தை சேர்ந்த கே.ஆர்.மஞ்சுளா, 3-ம் பரிசை அரியமரைக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

பரிசு

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.பந்தயம் நடைபெற்ற அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் இருபுறமும் திரளான பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டு வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments