ஆவுடையார்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 8 பேர் காயம்




பெங்களூருவில் இருந்து ராமேசுவரத்திற்கு வேனில் 10 பேர் சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே துரையரசபுரத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பும் போது எதிர்பாராதவிதமாக வேன் சாலையில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் தேவராஜ் (வயது 50), புனிதா (38), வரதராஜ் (27), சேத்தான் (24), ஜெயா ஸ்ரீ (30), ராஜம்மாள் (75), சந்தோஷ் (40), ஹரி (17) ஆகிய 8 பேர் காயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments