கோபாலப்பட்டிணத்தில் ரூ.30 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்!
கோபாலப்பட்டிணத்தில் ரூ.30 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று 27.05.2024 திங்கட்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் சின்ன பள்ளிவாசல் அருகில் செயல்பட்டு வந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்தால் சின்ன பள்ளிவாசல் மற்றும் காட்டுக்குள பள்ளிவாசல் பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதி பட்டு வந்தனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் பரிந்துரையின் அடிப்படையில் AD பஞ்சாயத் அனுமதி வழங்கியதையடுத்து ஊராட்சி மன்ற நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உதயம் J.தாஹிர், வார்டு உறுப்பினர்கள் அபுதாஹீர், சித்தி நிஜாமியா, லத்தீப், முன்னாள் ஜமாஅத் தலைவர் K.N.N.லியாக்கத் அலி, பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேலாளர் முகமது யூசுப், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments