தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு 1550 நாட்கள் பதில் அளிக்காமல் இழுத்தடித்ததால், மனுதாரருக்கு தாசில்தார் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
போடி தாசில்தார் அலுவலகம்
மதுரை சத்ய சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் என்.ஜி.மோகன், முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர். கடந்த 2019-ம் ஆண்டு இவர் தேனி மாவட்டம் போடி தாசில்தார் அலுவலகத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன் வைத்து விண்ணப்பம் அளித்துள்ளார், ஆனால் அது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் இருந்து முறையான தகவல் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சுமார் 1550 நாட்களைக் கடந்த நிலையில், தாசில்தார் அலுவலகம் முறையாக பதில் அளிக்காததால் மேல்முறையீடு செய்திருக்கிறார், அவ்வாறு மனு செய்தும் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். எனவே சென்னையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.10 ஆயிரம் இழப்பீடு
அது தொடர்பாக தகவல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதில் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தாசில்தார் மணிமாறன் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
எனவே தாசில்தார் தன்னுடைய சொந்த பணத்தில் ரூ.10 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மோகனுக்கு தபால் மூலம் அனுப்பிவைத்துள்ளதாகவும், மேலும் அவர் கேட்ட ஆவணங்களையும் அனுப்பி இருப்பதாகவும் மோகன் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.