25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் எவ்வளவு? கல்வித்துறை தகவல்




இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 767 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டன.

ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீத ஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் இருக்கிறதோ? அந்த இடங்களுக்கு ஏற்றாற்போல் தகுதியானவர்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதுதவிர நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமானோர் விண்ணப்பித்திருந்த பள்ளிகளில் மட்டும் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 84 ஆயிரத்து 765 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. அந்த இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஓ.டி.பி. எண் அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கையும் உறுதி செய்யப்பட்டது என்றும், வருகிற 3-ந்தேதிக்குள் அத்தந்த பள்ளிகளுக்கு சென்று பள்ளி முதல்வரிடம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments