நுழைவு பகுதியில் இருந்து புதிய பாலத்தின் தூண்களில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரம்




பாம்பன் நுழைவு பகுதியில் இருந்து புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இருந்து இரும்பு கர்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதிய ரெயில் பாலம்

பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும்பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்த புதிய ரெயில் பாலத்திற்காக கடலுக்குள் மொத்தம் 339 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணியில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப்பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர் மற்றும் அதன் மீது தண்டவாளங்கள் பொருத்தும் பணிகளும் முழுமையாக முடிவடைந்து உள்ளன.

மேலும் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை பாம்பன் நுழைவு பகுதியில் இருந்து நகர்த்தி தூக்குப்பாலம் அருகே உள்ள தூண்கள் மீது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓருசில வாரங்களில் இந்த புதிய தூக்கு பாலமும் மையப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது.இந்த நிலையில் பாம்பன் நுழைவு பகுதியில் உள்ள தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுமார் 20.மீ நீளம் கொண்ட இரும்பு கர்டர் தூண்கள் மீது பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ேமலும் மையப்பகுதி வரையிலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட இரும்பு கர்டர்கள் தூண்கள் மீது வரிசையாக பொருத்தப்பட உள்ளன.

இரும்பு கர்டர்கள்

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,

பாம்பன் நுழைவு பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தூக்கு பாலம் வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தூக்கு பாலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு செல்லப்பட்டதால் தான் பாம்பன் பகுதியில் இருந்து தூண்கள் மீது கர்டர் பொருத்தும் பணிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது தூக்கு பாலம் தூண்கள் வழியாக நகர்த்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால் தற்போது நுழைவு பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் மையப்பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்து தொடர்ந்து தண்டவாளங்கள் பொருத்தவும் பாலத்தின் ஓரப்பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் பொருத்தும் பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் 3 மாதத்திற்கு மேலாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments