கிராமங்களில் தேக்கமின்றி அடிப்படைத் தேவைகளுக்கன பணிகள் நடைபெற ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுரை




கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், மின்சாரம், சாலை மற்றும் சுகாதாரப் பணிகள் தேக்கமின்றி நடைபெற வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும், முக்கிய அரசுத் துறைகளான 18 துறைகள் ஒன்றிணைந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை, மின்சாரம் மற்றும் சுகாதாரப் பணிகளை தேக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் பொ செந்தில்வடிவு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்ஜி. சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments