ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு




ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெற்று தேர்வு பெற்றவர்களுக்கு சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் பாலமுருகன் வழங்கினார். இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற இருக்கிறது. மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்து செல்போன் வழியாக தகவல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் குறித்த நாட்களில் கலந்து கொள்ள வர வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments