‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டில் இருந்து ஒரு தனியார் பேருந்து சேலத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் புறப்பட்டது. இந்த பேருந்தில் சுற்றுலா பயணிகள், கூலி வேலைக்கு சென்றவர்கள் என 66 பேர் பயணம் செய்தனர்.
பேருந்தை ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த மணி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். 13-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பேருந்தை வளைவில் டிரைவர் திருப்ப முயன்று உள்ளார். அப்போது பேருந்தின் அச்சு முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து காட்டுப்பகுதியில் பள்ளத்தில் பாய்ந்தது.
13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் 80 அடி உயரத்திற்கு பள்ளத்தில் தாறுமாறாக ஓடி வந்த அந்த பேருந்து, 11-வது கொண்டை ஊசி வளைவில் வந்து சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது.
பேருந்து பள்ளத்தில் பாய்ந்து வந்த போது, பயணிகளின் கூக்குரல் சத்தம் மரணஓலம் போல் மலையில் எதிரொலித்தது. இந்த கோர விபத்தில், பேருந்து தாறுமாறாக பள்ளத்தில் பாய்ந்த போது அதில் இருந்த பயணிகள் சிலர் பேருந்தில் இருந்து வெளியே தடுமாறி விழுந்தனர். பலர் பேருந்தின் இடிபாட்டில் சிக்கி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் ‘அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டனர்.
மேலும் பயணிகள் பலர் மயங்கியபடி பேருந்திலேயே மூச்சுத்திணறியபடி புலம்பிக்கொண்டிருந்தனர். இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். பேருந்து டிரைவர், கண்டக்டர் உள்பட 63 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போதிய அளவு ஆம்புலன்ஸ் இல்லாததால், அந்த வழியாக சென்ற வேன், டெம்போ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சக்கர நாற்காலிகள் மூலம், ஸ்டெக்சர் மூலமும் விரைந்து அழைத்து சென்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் சூரமங்கலம் ஏ.சி.எம்.நகர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி (37), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (11), சேலம் கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிராம் (57) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் 2 ஆண் பயணிகள் உடல் அடையாளம் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் பிருந்தாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் டாக்டர்களிடம் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வந்து விசாரணை நடத்தினார்.
சேலம் - ஏற்காடு 😔😔😔 pic.twitter.com/ZS5W9iajD8
— தூயோன் (@Deepan_offl) April 30, 2024
இந்த விபத்தால் சேலம்-ஏற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் உறவினர்கள் என ஏராளமானர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு திரண்டனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.