கோபாலப்பட்டிணத்தில் புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது!



கோபாலப்பட்டிணத்தில் மின் புதிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் ஆழ்துளை கிணறு (போர்) செயல்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணற்றின் மூலம் ஊராட்சி சார்பில் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து வந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு முழுவதுமாக செயல் இழந்ததால் கோபாலப்பட்டிணம் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 30.4.2024 அன்று நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து கோபாலப்பட்டிணம் மக்கள் துணை ஆட்சியரை சந்தித்து கடந்த பத்து நாட்களாக தண்ணீர் வராமல் உள்ளது எனவும் மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நேற்று மாலை 02.05.2024 புதிய மின்மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் சரியாக வருகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்று 03.05.2024 முதல் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 
தண்ணீர் வர பெரிதும் காரணமாக இருந்த இளைஞர்கள் மற்றும் விரைந்து நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பாகவும், GPM மீடியா சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments