தியாகத் திருநாளை இன்று (ஜூன்.17) கொண்டாடும் GPM மீடியா வாசகர்களுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!தியாகத் திருநாளை மகிழ்வுடன் வரவேற்கும் இந்த நன்னாளிலே இன்று (ஜூன்.17) தியாகத் திருநாளை கொண்டாடும் உள்ளூர் கடல் கடந்து வாழும்  வெளிநாடு வாழ் நண்பர்களுக்கும், உள்ளூர் இணையதள வாசகர்களுக்கும், அன்பின் தோழர்கள் அனைவருக்கும் GPM மீடியா சார்பில் 'ஈதுல் அழ்ஹா' இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

"தக்கப்பல்லல்லாஹூ மின்னா வ மின்கும் "

"அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக.

ஹஜ் எனும் சர்வதேச மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் இன, மொழி, நிற, பிரதேச, வேறுபாடுகள் புறக்கணித்து; ஒரே நேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்ற மக்காவில் ஒன்றுகூடி ஐக்கியத்தையும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர்.

அதே நேரம் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை அனைவரும் சிறப்புடன் நிறைவேற்றி, பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், நலமுடன் இல்லம் திரும்பவும், ஏனையவர்களுக்கு வரும் வருடங்களில் ஹஜ் கடமையை செய்யும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் கையேந்துவோம்.

இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments