அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பலி வைக்கோல்போர் எரிந்து நாசம்






புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் இறந்தன. வைக்கோல்போர் எரிந்து நாசமானது.

2 பசுமாடுள் பலி 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அறந்தாங்கி அருகே பிள்ளை வயல் கிராமத்தில் சின்னத்துரை என்பவருடைய வீட்டில் வைத்திருந்த வைக்கோல் போர் மீது மின்னல் தாக்கியதில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் கட்டி வைத்திருந்த 2 பசுமாடுகளும் மின்னல் தாக்கியதில் இறந்து கிடந்தன.

இதைப்பார்த்த சின்னத்துரை குடும்பத்தினர் கண்ணீர் வீட்டு கதறி அழுதனர்.

வைக்கோல்போர் நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தறர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து நாசமானது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments