அதிரை ரயில் நிலையத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஹாஜிகள் பயணம்!!




அதிரையில் 60க்கும் மேற்பட்ட ஹாஜிகள் ஹஜ் கமிட்டி மூலமாக 31/05/2024  மதியம் அதிரை ரயில் நிலையத்தில் இருந்து புனித பயணம் மேற்கொண்டனர் ஹாஜிகளை வழியனுப்பி வைப்பதற்காக அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், குடும்பத்தினர் ஆகியோர் ரயில் நிலையத்தில் கூடி வழியனுப்பி வைத்தனர்.

மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் இதே இரயில் நிலையத்தில் இருந்து இரவு ரயில் மூலம் வழியனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 ஹாஜிகள் புறப்படும்போது வழியனுப்பி வைக்க வந்தவர்கள் பாங்க் சொல்லி அனுப்பி வைத்தது போன்று இன்றும் பாங்க் சொல்லி ஹாஜிகள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments