கோட்டைப்பட்டினத்தில் முஸ்லிம் ஜமாஅத் (வஃக்ப்) & தமுமுக மருத்துவ சேவை அணி & காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் (வஃக்ப்) மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மருத்துவ சேவை அணி மற்றும் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் (08/062024) சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு கோட்டைப்பட்டினம் ஜமாஅத் தலைவர் A.சரிப் அப்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்டத் துனைத் தலைவர் M.S.K.முகமது சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக-மமக மாவட்ட தலைவர் ஷேக் தாவூதீன், தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது,  மமக மாவட்டச் செயலாளர் ஜகுபர் அலி, தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் நூர் முகமது,  ஜமாத் துணைத் தலைவர் ஜிம் சரிப் அப்துல்லாஹ், தமுமுக ஒன்றிய தலைவர் மற்றும் ஜமாத் பொருளாளர் A.சரிப்,S.ஹாஜா முஹைதீன், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் S.ஹாஜா முஹைதீன், விசைப்படகு சங்கத் தலைவர் ஹசன் மொகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஜனாப் S.M.சீனியார் ஒன்றிய துணை பெருந்தலைவர், தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜனாப்.ஷேக் அப்துல்லா அவர்கள், வட்டாட்சியர் மணமேல்குடி ரவிக்குமார் அவர்கள், காவல் ஆய்வாளர் கோட்டைப்பட்டினம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.

Echo மற்றும் ECG எடுக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 170 நபர்கள் பயனடைந்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments