அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்




புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் உறுப்பினராக அயல்நாடுகளில் பணிபுரியும், கல்வி பயிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் 18 முதல் 55 வயது வரையுள்ள தமிழர்கள், அயலக தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (http//nrttamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம். இந்த அட்டை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும், உறுப்பினர்களின் பதிவை ஊக்குவிக்கும் விதமாக 15.08.2024 வரை பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விபத்து காப்பீடு, தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்ட மையத்தில் தெய்வானை (9688520300) என்பவரை தொடர்பு கொள்ளலாம். இம்மையத்தை அணுகும் நிலையில் அயலக தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும், வாரியத்தில் உறுப்பினர் பதிவும் மேற்கொள்ளலாம். மேலும், அயலக தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், வாரியத்தில் உறுப்பினராகுதல் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வுகாண கட்டணமில்லா சேவை மையத்தினை தொலைபேசி எண் 18003093793-ஐ (இந்தியாவிற்குள்), 8069009901 (அயல் நாடுகளிலிருந்து தொடர்புக்கு), 8069009900 (தவறிய அழைப்பு - Missed Call No.) தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments