கவிநாடு கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்




புதுக்கோட்டைஅருகே 1,200 ஏக்கர் கொண்ட கவிநாடு கண்மாயில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைபா) இணைந்து, தூர்வாரும் பணி மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பின் பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றது. கருவேலமரங்கள் அகற்றப்பட்டு, குறுங்காடு அமைக்கப்படுகிறது. மேலும் கண்மாயில் புதிதாக வேம்பு, புங்கை, கொடுக்காபுளி, மருது, ஆலமரம், பனைமரம், மா, பலா, பூவரசு போன்ற மரக்கன்றுகளை ஏரியின் வெளிப்பகுதியில் 50 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யப்பட உள்ளது. அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், "காவிரி-வைகை-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காடுகள் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார். இந்நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், கைபா திட்ட இயக்குனர் அசோக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments