கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் பல மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு! AD பஞ்சாயத்துக்கு பறந்த புகார்!! சரி செய்த ஊராட்சி நிர்வாகம்






கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருந்த நிலையில் AD பஞ்சாயத்துக்கு புகார் சென்றதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சரி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் இராமநாதபுரம் முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினர் அன்வர் ராஜா M.P நிதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அந்த விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து எரியாமல் இருந்தது. 

இந்நிலையில் சமூக ஆர்வலரான உமர் கத்தா அவர்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் எரியாத உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டி புகார் அளித்தார். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் (AD Panchayat) தொலைபேசியில் புகார் அளித்ததின் பேரில் கடந்த 16/06/2024 அன்று உயர்கோபுர மின்விளக்கில் பழுதடைந்த 8 பல்புகள் புதிதாக மாற்றப்பட்டது.

மேலும் சமூக ஆர்வலரான உமர் கத்தா அவர்கள் கூறுகையில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் உள்ள அரசு அதிகாரிளுக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு பல்வேறு பட்ட முயற்சிகளின் அடிப்படையிலேயே உயர்கோபுர மின்விளக்கு சரி செய்யப்பட்டது என தெரிவித்தார். மேலும் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்..






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments