மதுரை-தொண்டி ரெயில் பாதை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை




தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முகமது ரபீக் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ஹக்கிம் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் தனுஷ்கோடி, முகமது அப்துல் ரஹீம், சங்கர சுப்பிரமணியன், ஜேசு மணி, சேது, அர்ச்சுனன், வாழ வந்தான், அருள்சாமி, முத்துமாடன், மகேஸ்வரன், ரமேஷ், மணி உள்பட பலர் மாநாட்டில் பேசினா். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 70 வயதானவருக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் 100 சதவீத செலவு தொகையை வழங்க வேண்டும். மதுரை- தொண்டி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார். முன்னதாக நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட செயலாளராக சங்கரசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments