புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது




புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியானது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்பட அரசு சார்பில் நடத்தப்படும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின் மீண்டும் கூட்டங்கள் நடைபெற தொடங்கின. அந்த வகையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்குகிறார்.

திட்டங்கள்

கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்வதுடன், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சிரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு மேல் நடைபெறமால் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்போது நடைபெற உள்ள நிலையில் விவசாய சங்கத்தினர் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments