25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.8 லட்சத்தில் நல உதவிகள்




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா திங்கள்கிழமை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம், 20 மாற்றுத் திறனாளிகளின் இயற்கை மரணங்களுக்கு, தலா ரூ. 17 ஆயிரத்துக்கான காசோலைகள், 2 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு நடைப் பயிற்சி உபகரணம் உள்பட மொத்தம் 25 பேருக்கு மொத்தம் ரூ. 3.77 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 629 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஆா். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமாா் (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments