ஆவுடையார்கோவிலில் குடிகள் மாநாடு; 34 மனுக்களுக்கு தீர்வு




ஆவுடையார்கோவில் தாலுகாவில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் குடிகள் மாநாடு நடைபெற்றது. இந்த குடிகள் மாநாட்டில் 34 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 78 மனுக்கள் விசாரணையில் உள்ளதாக ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் துணை தாசில்தார், அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments