தீயத்தூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து பெண் படுகாயம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ROS தனியார் பஸ் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு 25-06-2024 அன்று சென்று கொண்டிருந்தது. பின்னர் அங்கிருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆவுடையார்கோவில் நோக்கி பஸ் வந்தது. ஆவுடையார்கோவில் அருகே தீயத்தூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனத்திற்கு வழிவிடுவதற்கு தனியார் பஸ் டிரைவர் சாலையோரமாக பஸ்சை ஒதுக்கியபோது எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ராமநாதபுரம் மாவட்டம், சொணக்கோட்டையை சேர்ந்த ராமு மனைவி ஜோதி (வயது 30) என்பவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்புனவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments