அலையாத்தி காடு பகுதியில் கடலுக்குள் இறங்கி கைகளால் வகை வகையான மீன்பிடிப்பு ருசி அதிகம் எனக்கூறும் மீனவர்கள்




அலையாத்தி காடு பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி கைகளால் வகை வகையான மீன்களை பிடித்தனர் .

ஆற்றுக்கால்வாய் கடல் பகுதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திலேயே அதிகமான மீனவர்களை கொண்ட பகுதியாகவும் இது திகழ்கிறது. இந்த மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதில் பல முறைகளை பின்பற்றி வருகின்றனர். நாட்டுப்படகு, பைபர் படகு, சிறிய வத்தை, தெர்மாகோலால் செய்யப்பட்ட மிதவை, தூண்டில் நரம்பு, தூண்டில் வலைவீச்சு வலை உள்ளிட்டவற்றின் மூலமாகவும் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதனிடையே உப்பூர், திருப்பாலைக்குடிக்கு இடைப்பட்ட மாங்குரோவ் காடுகள் (அலையாத்தி காடு ) உள்ள ஆற்றுகால்வாய் கடல் பகுதியில் இயற்கையாகவே இறால், நண்டு உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடல் பகுதியில் இறங்கி இறால், நண்டு உள்ளிட்ட பல வகை மீன்களை கைகளால் பிடித்து வருகின்றனர்.

அதிகம் ருசி கொண்டவை

இதுகுறித்து திருப்பாலைக்குடியை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறும்போது, திருப்பாலைக்குடி, உப்பூர் இடைப்பட்ட பகுதியில் இயற்கையாகவே மாங்குரோவ் காடுகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் காடுகள் உள்ள பகுதியில் இறால், நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகம்.

ஆற்றுக்கால்வாய் கடல் பகுதியில் நீரோட்டம் குறைவாக இருக்கும்போது கடலுக்குள் இறங்கி நீந்தி வரும் இறால், நண்டு, ஓரா உள்ளிட்ட மீன்களை கைகளால் பிடிப்போம். அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவோம். படகுகளில் பிடித்து வரும் இறால், நண்டு மீன்களை விட மாங்குரோவ் காடுகள் உள்ள ஆற்றுக்கால்வாய் கடல் பகுதியில் பிடிக்கப்படும் இந்த வகை மீன்கள் அதிக ருசியாக இருக்கும் என கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments