புதுக்கோட்டையில் மாணவிகளிடையே தலைமைப் பண்பை மேம்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி ஒன்றில் சிறப்பாக படிக்கும் மாணவியை ஒருநாள் தலைமை ஆசிரியையாக பணியமர்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவ, மாணவிகள் பள்ளிப்பருவத்தில் இருந்தே தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமை பண்பில் உள்ள குறைபாடுகள் எவ்வாறு களைய வேண்டும், தங்களுக்கு அந்தப் பணியில் உள்ள சிரமங்கள், நன்மைகள் ஆகியவற்றை அறிந்து அதற்கு ஏற்றார் போல தங்களுடைய தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசும், ஆசிரிய சமுதாயத்தினரும் பல்வேறு வகையான பாடங்கள் மற்றும் போதனைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு ஒரு படி மேலே போய் முன்னுதாரணமாக பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரையே ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுத்து அவருக்கு பணி நியமன ஆணையும் அளித்து அவரை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து ஆசிரியர் சமுதாயத்தினர் அழகு பார்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளி பருவத்திலேயே தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்காட்டும் விதமாக பள்ளியில் நன்றாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் மாணவியாக விளங்கும் 11ம் வகுப்பில் பயாலஜி படித்து வரும் மாணவி மெய் வர்சிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து அவரை இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியராக அறிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி அவருக்கு ஒரு பணியானையை அளித்து பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் ஆசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் வாழ்த்து கூறி அவரை அழைத்து வந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு தலைமை ஆசிரியராக இருக்கும் தமிழரசி சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களும், மாணவிகளும் அவருக்கு வாழ்த்து கூறினர். இதைத் தொடர்ந்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவி மெய் வர்சிதா இன்றைய வருகை பதிவேடு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுடன் வகுப்பறைக்கு சென்று மாணவிகளுடன் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள மாணவி மெய் வர்ஷிதா கலந்துரையாடி ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான் இன்று நம் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள் நான் ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறி அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறேன். மேலும் நானே ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீங்களும் அடுத்தடுத்து இதுபோன்று வாய்ப்புகளை பெற வேண்டும் என்று மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
மாணவி ஒருவரையே ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியமர்த்தி அவரை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவர்களுக்கு அந்த பணியின் முக்கியத்துவம் மட்டும் அல்லாமல் அந்த பணியில் உள்ள சிரமங்கள் உள்ளிட்டவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இது போன்ற முயற்சி எடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.